வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2016 (15:41 IST)

ஆஸ்திரேலியா ’வொயிட் வாஷ்’ - விராட் கோலி மற்றும் இந்தியா நம்பர் 1

ஆஸ்திரேலியா ’வொயிட் வாஷ்’ - விராட் கோலி மற்றும் இந்தியா நம்பர் 1

ஆஸ்திரேலிய அணியை 3-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம், டி-20 தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளதோடு, விராட் கோலியும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 

 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி ‘வொயிட் வாஷ்’ செய்தது. இதன் மூலம், 8ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி 120 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
 
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி 8ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆவது இடத்தையும், இலங்கை அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. 4ஆவது, 5ஆவது இடங்கள் முறையே இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் பிடித்துள்ளன.


 
 
விராட் கோலி முதலிடம்:
 
இந்த டி-20 தொடரின் மூன்று போட்டிகள் முறையே 90*, 59*, 50 ஆகிய ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி வீரர் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் 892 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
 
முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் 868 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் [795 புள்ளிகள்] 3ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளஸ்ஸி [758 புள்ளிகள்] 4 இடத்திலும், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் [740 புள்ளிகள்] 5 இடத்திலும் உள்ளனர்.