வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 8 செப்டம்பர் 2014 (13:28 IST)

தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது. இதில் இந்திய அணி தொடர்ந்து ‘ நம்பர் ஒன் ’ இடத்தை தக்க வைத்துள்ளது. 
 
இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து வென்றதாலும், முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் லீக்கில் ஜிம்பாப்வேயுடன் அதிர்ச்சி தோல்வியடைந்ததாலும் முதலிடத்தை ஆஸ்திரேலியா இழந்தது. இதன் விளைவு, இந்தியா ’ நம்பர் ஒன் ’ இடத்தைப் பிடித்தது.
 
இந்நிலையில் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேயா வெற்றி அடைந்தால் மீண்டும் ஆஸ்திரேயாவினால்  நம்பர் ஒன்  இடத்தைப் பறிக்க முடியும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்திய அணியால் இன்னும் சில காலத்திற்க்குத் நம்பர் ஒன் இடத்தைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.