Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இங்கிலாந்தை 211 ரன்களில் சுருட்டிய பாகிஸ்தான்


Abimukatheesh| Last Updated: புதன், 14 ஜூன் 2017 (19:12 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 211 ரன்களில் சுருண்டது. 

 

 
ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் முதல் பொட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர் முடிவில் 211 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
 
நல்ல பார்மில் இருக்கும் இந்திலாந்து அணி பாகிஸ்தான் பந்து வீச்சில் திணறியது. ஆரம்பத்திலே வரிசையாக தனது விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி போராடி 200 ரன்களை கடந்தது. பென் ஸ்டோக்ஸ் அணியை சரிவில் இருந்து மிட்டார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் அதிகபட்சமாக 46 ரன்கள் குவித்தார். பென் ஸ்டோக்ஸ் ஆட்டமிழந்த பின் வரிசையாக எல்லா வீரர்கள் வெளியேறினர்.
 
லீல் போட்டியில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணி பந்து வீச்சில் ஆட்டம் கண்டுவிட்டது. பாகிஸ்தான் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
 
இதேபோன்று நல்ல பார்மில் இருந்த நியூசிலாந்து அணி வங்கதேசம் அணியிடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. 


இதில் மேலும் படிக்கவும் :