வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 22 ஜனவரி 2016 (12:38 IST)

தோனிதான் இதற்கு சரிப்பட்டு வருவார் - சொல்கிறார் மைக் ஹசி

கேப்டன் பதவிக்கு தோனிதான் சரியானவர் - மைக் ஹசி ஆதரவு

கேப்டன் பணியை தோனி நீண்ட காலமாகவே சிறப்பாக செய்து வருகிறார். இந்த பணிக்கு தோனிதான் மிக பொருத்தமானவர் என்று ஆஸ்திரேலிய அணி முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார்.
 

 
ஆஸ்திரேலியா பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், புதன்கிழமை 4ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் குவித்தது. பின்னர் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ஒரு கட்டத்தில், 37.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 
மேற்கொண்டு 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி வெளியேறி தோல்வியை துவக்கி வைத்தார்.
 
தொடர்ந்து வந்த வீரர்களில் ஜடேஜா [24] தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால், ஆஸ்திரேலியா அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இது குறித்து அவர் கூறுகையில், “தோனி தொடர்ந்து தனது பணியை தொடர வேண்டும். கேப்டன் பணியை தோனி நீண்ட காலமாகவே சிறப்பாக செய்து வருகிறார். இந்த பணிக்கு தோனிதான் மிக பொருத்தமானவர்.
 
இது எளிதான பணி அல்ல என்பதை மக்கள் மறந்து விட்டனர். ஓவ்வொரு போட்டியிலும் 30 பந்துகளில் 60 ரன்களை குவிக்க முடியாது. சிறந்த பவுலர்கள் உங்களிடம் இருக்கும்போது, அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவார்கள். அவர்களுக்கு தோனியின் பலம், பலவீனம் தெரியும். எனவே எல்லா விஷயங்களும், எப்போதும் ஒரே மாதிரி நடக்காது.
 
எல்லா நேரமும் அவரே அதை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அவர் நிறைய நேரங்களில் அற்புதமாக செயல்பட்டு போட்டியை முடித்துக் கொடுத்திருக்கிறார்.
 
அவரால் கேப்டன் பணியை சிறப்பாக செய்ய முடியும் என்று உணரும் வரையில் அவர் அந்த பணியில் நீடிக்க வேண்டும். அதே நேரத்தில் தோனியிடம் இருந்து இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். 
 
இந்திய வீரர்கள் உண்மையிலேயே நல்ல கிரிக்கெட்டை ஆடியிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். இதனை நான்கு போட்டிகளிலும் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து 300 ரன்களை அவர்களால் குவிக்க முடிந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.