’இந்தியாவை வெல்வது கடினம்’ - சொல்வது முன்னாள் வேகப்புயல் பிரட் லீ


லெனின் அகத்தியநாடன்| Last Updated: புதன், 21 செப்டம்பர் 2016 (04:26 IST)
நியூசிலாந்து அணி இந்தியாவை வெல்வது கடினம் என்று நினைக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ கூறியுள்ளார்.
 
 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நாளை கான்பூரில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள பிரட் லீ, “நியூசிலாந்து அணியை விட, இந்திய அணி வலுவானதாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இது சக்தி மிக்க விஷயமாகும். ஷிகர் தவண் இழந்த இடத்தை பெற நிச்சயம் முயற்சிப்பார். அவர்கள் பந்துவீச்சில் திறமையான வரிசையை கொண்டுள்ளனர்.
 
இந்திய அணி 500ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது பெருமையான விஷயமாகும். நியூசிலாந்து எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் அபாயகரமாக செல்லப்போகிறது. உண்மையிலேயே இதனை அற்புதமான ஒரு தருணமாக உணர்கிறேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :