”சச்சினுடன் ஆலோசித்த பின்பு ஓய்வை அறிவித்தேன்” : மனம் திறந்த் ஜாகிர் கான்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (18:32 IST)
நேற்று வியாழன் [15-10-2015] அன்று தனது ஓய்வை அறிவித்துள்ள ஜாகிர் கான், அதற்கு முன்னதாக சச்சினுடன் கலந்து ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார்.
 
 
14 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
 
தான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருடன் கலந்து ஆலோசித்தாக கூறியுள்ளார்.
 
இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள ஜாகிர்கான், “நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்னதாக சச்ச்னினுடன் கலந்து ஆலோசித்தேன். நாங்கள் இருவரும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும், எதிர்காலம் குறித்தும் நிறைய பேசினோம்.
 
இது தவிர, ஆசிஷ் நெஹ்ரா, அஜித் அகார்கர் மற்றும் எனது பயிற்சியாளர் குறித்தும் ஓய்வை அறிவிப்பதற்கு முன்னதாக கலந்து ஆலோசித்தேன்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், ”இந்த முடிவை எடுப்பதற்கு இது கடினமாக இருந்தது. ஆனால், இதுதான் முடிவை எடுப்பதற்கு சரியான தருணம் என்று நினைத்தேன். நான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை குறித்து மிகவும் திருப்தியோடு இருக்கிறேன்.
 
எனது வாழ்க்கையில் எனக்கு அளிக்கப்பட்ட அனைத்து சவால்களையும் வெற்றி கொண்டு மேலே வந்துள்ளேன். எனது வேலையை சிறந்த முறையில் செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :