1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 15 மே 2015 (16:46 IST)

’நான் சிறப்பாக பந்துவீசுவதற்கு காரணம் தோனி’ - பிராவோ புகழாரம்

ஐபிஎல் போட்டியில் நான் சிறப்பாக பந்துவீசுவதற்கு காரணம் தோனிதான் என்று மேற்கிந்திய வீரர் டுவெய்ன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.
 

 
இது சென்னை அணி வீரர் பிராவோ கூறும்போது, “நான் தோனியிடம் பயிற்சி மேற்கொள்வேன். வலை பயிற்சியின் போது நான் அவரை கட்டுப்படுத்த முயற்சி செய்வேன். என்னால் தோனியை கட்டுப்படுத்த முடியும் என்றால் எவரையும் கட்டுப்படுத்த முடியும்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “நான் இன்னும் மேற்கிந்திய அணிக்கு கடமைப் பட்டுள்ளேன். ஆனால் தேர்வாவது எனது கையில் இல்லை” என்று பிராவோ தெரிவித்துள்ளார். தற்போது நடந்துவரும் ஐ.பி,எல். போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்து பிராவோ முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.