வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 22 ஜனவரி 2015 (17:20 IST)

குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் : ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு தீர்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று ஐபிஎல் கிரிக்கெட் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
 
கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, இதுகுறித்து விசாரிப்பதற்காக முத்கல் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 

 
அதன்படி விசாரணை நடத்திய முத்கல் குழு தனது அறிக்கையை சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், கலிஃபுல்லா ஆகியோர் கொண்ட அமர்வு இன்று 130 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை அறிவித்துள்ளது.
 
நீதிபதிகளின் அந்த தீர்ப்பில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்றும், குருநாத் மெய்யப்பனும், ராஜ் குந்த்ராவும் ஐபிஎல் அணிகளின் நிர்வாகிகள் தான் என்றும் கூறியுள்ளனர். 
 
மேலும் அடுத்தப் பக்கம்..

மேலும், சூதட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
 

 
இதனால், இனிமேல் பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் நிர்வாகிகள் வணிகரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நிர்வாகிகள் வனிக ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
கிரிக்கெட் போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் விருப்பம் கொண்டிருந்ததன் காரணமாக, அதன் தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.