வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 ஜனவரி 2016 (18:43 IST)

12 பந்தில் 51 ரன்களை குவித்து யுவராஜின் சாதனையை சமன் செய்த கெய்ல்

12 பந்தில் 51 ரன்கள் குவித்த கெய்ல்

இன்று நடந்த டி20 கிரிக்கெட் லீக் தொடரின் ஆட்டத்தில் 12 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரியோடு மொத்தம் 51 ரன் அடித்து தென்னாப்பிரிக்க வீரர் கெய்ல், இந்திய வீரர் யுவராஜின் சாதனையை செய்தார்.


 

 
பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனேகட்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் மோதின. அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் மெல்போர்ன் அணி இருந்தது.
 
முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் மொத்தம் 170 ரன்கள் எடுத்தது. இதனால் மெல்போர்ன் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் 15.1 ஓவரில் 171 ரன்கள் குவிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
 
மெல்போர்ன் அணியில் கெய்ல் மற்றம் கூப்பர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அதில் கெய்ல் வழக்கம்போல் தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். 12 பந்தில் 1 பவுண்டரி 7 சிக்சர்களுடன் 51 ரன்கள் அடித்தார். இதன்மூலம் அதிகவேகமாக (12 பந்தில்) அரைசதம் அடித்து யுவராஜ் சாதனையை சமன் செய்தார். இந்த ஆட்டத்தில் கெய்ல் 17 பந்தில் 2 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடித்து 56 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.
 
இருந்தாலும், மெல்போர்ன் அணி 15.3 ஒவரில் 143 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆகி, அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.