வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (11:27 IST)

W.V.ராமன் வாக்கு பொய்த்தது! கம்பீர் 3வது முறையாக டக் அவுட்!

கவுதம் கம்பீர் ஒரேயொரு இன்னிங்ஸ் ரன் எடுக்கத் தொடங்கிவிட்டால் போதும் பிறகு அவரால் என்ன முடியும் என்று உங்களுக்கே தெரியும் என்று கூறினார் கொல்கட்டா பயிற்சியாளர் W.V.ராமன். ஆனால் நேற்றும் அவரது வாக்குப் பொய்த்துப் போனது கம்பீர் மீண்டும் டக் அவுட்.
முதல் ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக மலிங்காவின் காலைப் பெயர்க்கும் யார்க்கரில் ஸ்டம்ப் பறந்தது.
 
டெல்லி அணிக்கு எதிரான 2வது ஆட்டத்தில் நேதன் கூல்டர் நைல் பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
நேற்று பெங்களூரு அணிக்கு எதிராக கோல்டன் டக். அவர் எதிர்கொண்ட முதல் பந்தே எல்.பி.ஆனார். ரன் இல்லை. மிட்செல் ஸ்டார்க் வீசிய நேர், ஃபுல் பந்திற்கு விரைவில் அவரால் பேட்டை இறக்க முடியவில்லை கால்காப்பைப் பந்து தாக்க வெளியேறினார்.
 
3 ஆட்டங்களிலும் அயல்நாட்டு பவுலர்களிடம் காலி.
 
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ‘டக்–அவுட்’டில் ஹாட்ரிக் படைத்த மோசமான வீரர் இவர் தான். அது மட்டுமின்றி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக தடவை டக்–அவுட் ஆன பரிதாபமானவர்களின் வரிசையிலும் முதலிடத்தை பிடித்துள்ளார். 
 
அவர் 91 ஆட்டங்களில் 10 முறை ரன் ஏதுமின்றி டக்–அவுட்டில் மடிந்திருக்கிறார். 2–வது இடத்தை தற்போது ஐதராபாத் அணிக்கா ஆடி வரும் அமித் மிஸ்ராவும் (78 ஆட்டம்), கொல்கத்தாவுக்காக விளையாடும் காலிசும் (93 ஆட்டம்) தலா 9 டக்குடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.32 வயதான கம்பீரை ரூ.12½ கோடிக்கு கொல்கத்தா அணி தக்க வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.