வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வியாழன், 24 ஏப்ரல் 2014 (14:11 IST)

'மில்லியன் டாலர் வேஸ்ட்'-இலிருந்து கிங்ஸ் லெவன் கிங் ஆக மாறிய மேக்ஸ்வெல்

கடந்த ஐபிஎல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியினால் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அதிரடி சூரப்புலி கிளென் மேக்ஸ்வெல் ஆட்டம் சொதப்பலோ சொதப்பலாக அமைய அவரை 'மில்லியன் டாலர் வேஸ்ட்' என்று ஐபிஎல். உரிமையாளர்கள் வட்டத்தில் அழைத்ததாக கிசுகிசுக்கப்பட்டது.
மேலும் ஆஸ்ட்ரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன், மிகவும் வெளிப்படையாகவே கிளென் மேக்ஸ்வெல்லின் 'அலட்சிய பேட்டிங்' பற்றி விமர்சனம் செய்தார்.
 
இவையெல்லாம் மேக்ஸ்வெல்லிடம் புதிய உத்வேகத்தை கிளப்பியுள்ளதாக ஆஸ்ட்ரேலிய இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணிக்காக மோசமாக ஆடியதால் அவரை டேரன் லீ மேன், 'அதுக்கு சரிப்படமாட்டார்' என்பது போல் தனிப்பட்ட முறையில் கூறியதாக அந்த செய்தி தெரிவித்துள்ளது.
குறிப்பாக T20 ஆட்டங்களில் 12 ஆட்டங்களில் வெறும் 102 ரன்களையே அவர் இதற்கு முன்பு எடுத்திருந்தார். வங்கதேசத்தில் ஆஸ்ட்ரேலியா மண்ணைக்கவ்வினாலும் இவரது ஆட்டம் அபாரமாகவே அமைந்தது. அதுமுதல் மேக்ஸ்வெல் வேறு வீரராக மாறிவிட்டார்.
 
இப்போது ஐபிஎல். கிரிக்கெட்டில் அனைத்துப் போட்டியிலும் கிங்ஸ் லெவன் கிங்காக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார் அவர்.