வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (22:12 IST)

”வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறக்கின்றன” - மனீஷ் பாண்டே உற்சாகம்

எனக்கு இது உற்சாகமளிக்கிறது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போலிருக்கிறது என்று இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மனீஷ் பாண்டே கூறியுள்ளார்.
 
இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு அஜிங்கே ரஹானே தலைமையிலான இந்திய அணியை தேர்வு குழு அறிவித்தது.
 

 
மூத்த வீரர்களான தோனி, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோஹித் சர்மா உள்ளிட்டவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் கொண்ட ஒருநாள் அணிக்கு இளம் வீரரான மனீஷ் பாண்டே முதன்முறையாகத தேர்வாகியுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி சார்பாக சிறப்பாக விளையாடியதை அடுத்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
இது குறித்து அவர் கூறுகையில், “எனக்கு இது உற்சாகமளிக்கிறது. வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போலிருக்கிறது. முதன்முறையாக இதயம் கொஞ்சம் உடைவதாக இருந்தது. ஏனென்றால் என்னை அழைத்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு இப்படி நடந்ததில்லை.
 
ஆனால், இது என்னுடைய கட்டுப்பட்டில் கிடையாது. நான் நீண்ட காலத்திற்கு இந்திய அனிக்கு என்னுடைய திறமையை நிரூபிக்க, பங்களிப்பை செலுத்த சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். இந்த ஐபிஎல்-இல் நிறைய 20, 30 ரன்கள் குவித்திருக்கிறேன். எப்போதும் நான் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். அந்த நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன் குவித்திருக்க வேண்டும்.
 
விளையாட்டில் போட்டி என்றிருப்பது எப்போதும் அழகுதான். இது எனது முதல் அனுபவம். நாட்டிற்காக சில போட்டிகளை விளையாடுவதற்காக காத்திருக்கிறேன். மேலும், என்னுடைய தனிப்பட்ட முத்திரைய பதிக்க முயற்சிகளை மேற்கொள்வேன். இது மட்டும் நடந்தால் உன்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன்” என்றார்.