வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 14 பிப்ரவரி 2015 (13:28 IST)

உலக கோப்பை: ஆஸ்திரேலியா அபார ஆட்டம் 342/9 - பின்ச் ’ஹாட்ரிக்’

இன்றைய உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளது. 
11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், மெல்போர்னில் இன்று 2 ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலில்
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மார்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
 
இதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் பின்ச் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த தொடக்கத்தை ஏற்படுத்தினர். வார்னர் - பின்ச் ஜோடி 7 ஓவர்களில் 52 ரன்கள் திரட்டி அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்தியது.
எனினும் 22 ரன்கள் எடுத்த போது வார்னர் கிளின் போல்ட் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் அதிர்ச்சி அளித்து ஏமாற்றினார். பின் வந்த ஸ்மித்தும் 5 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் பின்ச் தனது அரைசதத்தை கடந்தார். பெய்லியும் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி கொண்டிருக்க பின்ச் தன் பங்கிற்கு சதத்தை எட்டினார். இது பின்ச்சின் 6 ஆவது சதமாகும். 
 
பின்னர் பின்ச் 135 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். மறுமுனையில் பெய்லி 55 ரன், மேக்ஸ்வெல் 66 ரன்கள் எடுக்க இறுதியில் ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் ஸ்டீவன் பின், ஹாட்ரிக் சாதனை படைத்து அசத்தினார்.