1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 11 ஜூலை 2014 (16:03 IST)

முதல் இன்னிங்சில் 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 457 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 294 பந்துகளில் 122 ரன்கள் எடுத்திருந்தார். அணி கேப்டன் தோனி அதிரடியாக ஆடி 64 பந்துகளில் 50 ரன்களை குவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது விஜய் 146 ரன்களை குவித்திருந்த நிலையில், ஆண்டர்சன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகி அவுட்டானார்.

இந்நிலையில் ஜடேஜா தோனியுடன் ஜோடி சேர்ந்தார். ஜடேஜா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஸ்ட்ரோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிரியரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

தொடர்ந்து தோனி 82 ரன்னில் ரன் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய பின்னியும், இஷாந்த் சர்மாவும் ஒரு ரன்னில் அவுட்டானதால் 344 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 346 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற நிலை நிலவியது.

பின்னர் களமிறங்கிய புவனேஸ்வர் குமாரும், முகமது சமியும் 100 ரன்களை அடித்தனர். புவனேஸ்வர் குமார் 58 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். முகமது சமி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் குவித்தார். இருவரது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 457 ரன்களை எடுத்தது.

இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்தது. மேலும் மூன்று நாள் ஆட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.