1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Bharathi
Last Modified: சனி, 3 அக்டோபர் 2015 (07:02 IST)

முதல் 20 ஓவர் போட்டி : தென் ஆப்ரிக்காவிடம் போராடி தோற்றது இந்தியா

இந்திய அணிக்கு எதிரான முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.


 

 
தென் ஆப்ரிக்கா அணி இந்தியாவில் 70  சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்றுவிதமான போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  தரம்சாலாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.
 
ரோஹித்தின் ருத்ரதாண்டவம்
 
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்க தவான் 3 ரன்னில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் வந்த கோலியிடன் ரோஹித் ஷர்மா ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 62 பந்துகளில் 100 ரன்களை கடந்து சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.
 
200 ரன் வெற்றி இலக்கு
 
விராட் கோலி நிதானமாக விளையாடி 43 ரன்களில் வெளியேறினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களை குவித்தது.
 
இதனை தொடர்ந்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது தொடக்க ஆட்டகாரர்களான டிவில்லியர்ஸ், ஆம்லா ஜோடி இந்திய அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். ஆம்லா 36 ரன்களில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
 
தென் ஆப்பிரிக்கா வெற்றி
 
இதனை தொடர்ந்து வந்த டுமினி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி தென்னாப்பிரிக்க அணியை வெற்றிப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றார். இருபதாவது ஒவரில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
கடைசி வரை ஆட்டமிழக்காமல் 68 ரன்களுடன் களத்தில் இருந்த டுமினி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த வெற்றி மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபது ஒவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.