Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிராவிட்?

Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2017 (17:52 IST)

Widgets Magazine

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு, தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே அணியின் மேலாளராக பொறுப்பேற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்பாக ஒரு காலத்தில் திகழ்ந்த ராகுல் டிராவிட் மற்றும் அணில் கும்ளே ஆகியோர் ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் அணியை முன்னேற்றுவதற்கான யோசனைகளை தெரிவித்து வந்தனர்.
 
கடந்த ஆண்டில் அணில் கும்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. மேலும், வங்கதேசம், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஜிம்பாவே ஆகிய அணிகளுடனான டெஸ்ட் தொடரை வென்றது.
 
19 வயதுக்கு உள்பட்டோருக்கான  கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டும் சிறந்த பங்களிப்பை அணிக்கு அளித்துள்ளார். இந்நிலையில், அணியின் புதிய பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்படலாம் எனவும், தற்போதைய பயிற்சியாளர் அணில் கும்ளே, அணியின் மேலாளராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இது தொடர்பான முடிவுகளை சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் அடங்கிய பி.சி.சி.ஐ-யின் ஆலோசனைக் குழு இறுதி செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கோலியை நாயுடன் ஒப்பிட்ட ஆஸ்திரேலியா

இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலியை ஆஸ்திரேலியா ஊடகம் விலங்குடன் ஒப்பிட்டுள்ளது

news

சரிவில் இருந்து சற்று மீண்ட இந்திய அணி: 126 ரன்கள் முன்னிலை

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ...

news

இந்தியாவை வாட்டி எடுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் பார்க்கிறேன்: கங்குலி குமுறல்

இந்தியாவை வாட்டி எடுக்கும் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களை இப்பதான் முதல்முறையாக ...

news

சச்சினால் கூட முடியாததை கோலி செய்தார் - கங்குலி சப்போர்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலி தொடர்ந்து அடித்த நான்கு சதங்கள் அசாத்தியமானவை, சச்சின் கூட ...

Widgets Magazine Widgets Magazine