வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 10 டிசம்பர் 2014 (18:50 IST)

'மக்களின் நம்பிக்கையை காப்பாற்றா விட்டால் கிரிக்கெட் சீர் குலைந்து விடும்' - கிரிக்கெட் வாரியத்திற்கு நீதிபதிகள் கண்டனம்

மக்களின் நம்பிக்கையை காப்பாற்றா விட்டால் கிரிக்கெட் சீர் குலைந்து விடும் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆபத்தாகிவிடும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
 
இன்று ஐ.பி.எல் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது என்.சீனிவாசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'தான் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக தேர்தெடுக்கப்பட்டால், ஐ.பி.எல். விவகாரங்களில் தலையிடமாட்டேன்.
 
தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று நிரூபிக்கும் வரை ஐபிஎல் போட்டி விவகாரங்களில் இருந்து ஒதுங்கி இருக்க தயார். எனவே இந்திய கிரிக்கெட் வாரிய தேர்தலில் போட்டியிட சுப்ரீம் கோர்ட்டு அனுமதிக்க வேண்டும்' என்று என். சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதற்கிடையே ஐபிஎல் சூதாட்ட வழக்கு குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்த கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே விசாரித்த முத்கல் குழு அறிக்கையின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். புதிதாக உயர்மட்ட குழு விசாரணை நடத்தினால் கிரிக்கெட் வாரியத்தின் சுயாட்சி உரிமை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, 'மக்களின் நம்பிக்கையை காப்பாற்றா விட்டால் கிரிக்கெட் சீர் குலைந்து விடும்' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.