1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (14:24 IST)

தோனி உலகின் மிக சிறந்த வீரர்: ஐ.சி.சி. தலைவர்

நமது இந்திய கேப்டன் தோனி குறித்து அவ்வப்போது கருத்துக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இதுகுறித்து ஐ.சி.சி தலைவர் என்.சீனிவாசன் கூறுகையில், தோனி உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். கிரிக்கெட் போட்டியில் இருக்கும் அணைத்து விதமான கோப்பைகளையும் வென்று அசத்தியுள்ளார். 
 
இந்திய கிரிக்கெட் அணியில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என கூறினார். ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.