Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மீண்டும் கேப்டனாக களமிறங்கும் தோனி


Abimukatheesh| Last Updated: திங்கள், 9 ஜனவரி 2017 (15:30 IST)
நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்கும் பயிற்சி போட்டியில் தோனி கேப்டனாக களம் இறங்க உள்ளார்.

 

 
ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து தோனி சென்ற வாரம் விலகினார். இதையடுத்து டெஸ்ட் போட்டியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் தோனி, இங்கிலாந்து எதிராக நாளை நடக்கவுள்ள பயிற்சி போட்டியில் ‘இந்திய A’ அணிக்கு கேப்டனாக களமிறங்கவுள்ளார். இந்த பயிற்சி போட்டியில் யுவராஜ் சிங்கும் விளையாடுகிறார். 
 
சர்வதேச போட்டியில் தோனி கேப்டனாக களம் இறங்கப் போகும் கடைசிப் போட்டி இதுவாகதான் இருக்கும். பயிற்சிப் போட்டி என்பதால், ரசிகர்கள் போட்டியை நேரில் கண்டுகளிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதனால் ரசிகர்கள் கூட்டம் அதிகமளவில் இருக்கும் என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :