வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (14:59 IST)

'தோனி கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ளார்' - அகார்கர் ஆவேசம்

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இந்திய அணியின் கேப்டன் தோனி அணிக்கு சுமையாக மறியுள்ளார் அவர் ஒரு கேப்டனாகவும் மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் அவர் தடுமாறுகிறார் என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகார்கர் கூறியுள்ளார்.


 

தோனியின் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உல கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என பல முக்கியமான போட்டிகளை வென்றாலும் 2015 உலக கோப்பை அரையிறுதியில் மோசமான தோல்வி, வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இருபது ஓவர் தொடர் போன்றவற்றை இழந்ததால் அவரின் கேப்டன் செயல்பாடும் அவரின் தனிப்பட்ட ஆட்டமும் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில் தோனியின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் அகார்கர், ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல், ஒரு வீரராகவும் தோனியின் செயல்பாட்டை தேர்வாளர்கள் கவனிக்க வேண்டும். கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்டார் என்பதற்காக இவரது தோல்விகளை ஏற்க முடியாது. அணிக்கு இவர் ஒரு சுமையாக இருப்பதை யாரும் விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.

மேலும் தோனி 4 வது இடத்தில் களமிறங்க இருப்பது சரியான முடிவல்ல அவர் அதிரடியாக விளையாடியபோது முன்னதாக களமிறங்கினால் நல்லது என நினைத்தனர். ஆனால் தற்போது தோனி முதல் பந்திலிருந்து அடித்து விளையாடும் திறமையை இழந்துவிட்டார். தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் உள்ளார் எனவும் அகார்கர் கூறியுள்ளார்.