1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 27 ஜூன் 2014 (13:37 IST)

இங்கிலாந்து போட்டி தொடர் எங்களுக்கு மிக சவாலான ஒன்றாக இருக்கும் - தோனி

இங்கிலாந்து அணி தற்பொழுதும் திறமை கொண்ட அணியாகும். இந்த போட்டி தொடர் மிக்க சவாலான ஒன்றாக எங்களுக்கு இருக்கும் என்று தோனி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

 
இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் செய்து இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாட உள்ளது. இலங்கையுடனான போட்டியில், தொடர் தோல்வியை இங்கிலாந்து அடைந்தநிலையிலும், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியிடம் விளையாடுவது என்பது புதிய சவாலாக இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 
அவர் கூறுகையில், எங்களை விட சொந்த நாட்டை குறித்து அவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். எனவே, போட்டி கடினமாக இருக்கும். 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டி என நீண்ட கடினமான தொடராக இது இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நாங்கள் விளையாடுகிறோம். எனவே, எங்களுக்கு இது புதிதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி, டெஸ்ட் போட்டியில் 0 - 1, ஒரு நாள் போட்டியில் 2 - 3 மற்றும் ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் இலங்கை அணியிடம் தோல்வி அடைந்தது. எனினும் இதனை கொண்டு இங்கிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த காலத்தில் என்ன நடந்துள்ளது என்பது முக்கியமில்லை. எதிர் அணியினரின் ஒருங்கிணைப்பு அடிப்படையில் அவர்களை எப்பொழுதும் மதிப்பிட வேண்டும். இங்கிலாந்து அணி தற்பொழுதும் திறமை கொண்ட அணியாகும். அதாவது, இந்த போட்டி தொடர் மிக்க சவாலான ஒன்றாக எங்களுக்கு இருக்கும் என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 
தோனி கேப்டன்சி குறித்து கூறுகையில், அணியை வழிநடத்தி செல்வது என்பது ஒரு முறை. விளையாடுவதற்கு நான் செல்லும் ஒவ்வொரு முறையும், நான் ஒரு நல்ல கேப்டன் என்பதனை நிரூபிப்பதற்காக செல்வதில்லை. உங்களிடம் கொடுக்கப்பட்ட பணியை செய்வது, அதனுடன் பிற வீரர்களின் மதிப்பையும் நீங்கள் பெற வேண்டும். அதனை கேட்டு பெற கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.