வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (12:10 IST)

ஐபிஎல். கிரிக்கெட்: கோலிக்கு 2 கேட்ச்களை விடலாமா? டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல். கிரிக்கெட் 2வது போட்டியில் டெல்லி அணியை கோலி தலைமை பெங்களூரு அணி வீழ்த்தியது. டெல்லியில் பீட்டர்சன் இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
ரன் விகிதத்தில் மிகவும் பின் தங்கியிருந்த டெல்லி அணியை டுமினி (67 நாட் அவுட், டெய்லர் 43 நாட் அவுட்) மற்றும் டெய்லர் மீட்டெடுத்து ஓரளவுக்கு போராடக்கூடிய ரன் எண்ணிக்கையான 145 ரன்களுக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.

எப்படியிருந்தாலும் டெல்லி தோற்கும் என்ற நிலைதான் இருந்தாலும் கேப்டன் விராட் கோலிக்கு கேட்சை விட முடியுமா? டெல்லி அணி ஒரே ஓவரில் கோலி 20-இல் இருந்தபோது 2 கேட்ச்களை விட்டது.
பரிதாப பவுலர் வெய்ன் பார்னெல். நியூசீ. ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம் ஷாட் ஃபைன்லெக்கில் சிட்டரை கோட்டை விட்டார். பிறகு அதே ஓவரில் டீப் கவரில் ஒரு கேட்ச் கோட்டைவிடப்பட்டது. ஆனால் நீஷம் விட்டது மிக மிக எளிதான கேட்ச் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.
 
T20 உலகக் கோப்பையில் எந்த சேர்க்கை (கோலி, யுவ்ராஜ் சிங்) இந்தியாவை காலி செய்ததோ அதே சேர்க்கை நேற்று அபாரமாக விளையாடியது. யுவ்ராஜ் சிங் 3 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 29 பந்துகளில் 52 நாட் அவுட். கோலி 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 49 நாட் அவுட். 16.4 ஓவர்களில் 146/2 என்று வென்றது பெங்களூரு.

கோலியும், யுவ்ராஜும் இணைந்து 7.5 ஓவர்களில் 84 ரன்களை விளாசினர். முன்னதாக டெல்லி அணி 35/4 என்று திணறியது அப்போதுதான் டுமினி, ராஸ் டெய்லர் இணைந்து அவுட் ஆகாமல் 110 ரன்களைச் சேர்த்தனர். கடைசி 5 ஓவர்களில் 60 ரன்கள் விளாசப்பட்டது. பெங்களூரு அணியில் வருண் ஆரோன் டொனால்டின் மேற்பார்வையில் அபாரமாக வீசினார் 3 ஓவர்களில் 9 ரன்கல் ஒரு விக்கெட். சாஹல் என்ற லெக்ஸ்பின்னர் அசத்தினார். நல்ல டர்ன் மற்றும் பவுன்ஸ் அவரது பந்துகளில் இவர் ஒரு எதிர்கால நட்சத்திரம் என்பதை காட்டியது. அசோக் டிண்டா தண்டா என்பதை நிரூபித்தார் 4 ஓவர்களில் 51 ரன்களை அவர் விட்டுக் கொடுத்தார்.
டெல்லி அணியில் ஷமி, பார்னெல் சிறப்பாக வீசினர். லெக்ஸ்பின்னர் சாஹல் அருமையாக வீசியதற்கு அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
 
இன்று 2 ஆட்டங்கள் ஒன்றில் சென்னை-பஞ்சாப் மோதுகிறது. இது மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. 
 
இரண்டாவது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் 8 மணிக்கு.