வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 13 மே 2016 (16:46 IST)

டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் அதிரடி சாதனை

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் 3000 ரன்களுக்கு மேல் குவித்து சாதனைப் படைத்துள்ளார்.
 

 
நேற்று வியாழன் இரவு ஐபிஎல் போட்டியில், டெல்லி டேர் டேவில்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
முதலில் ஆடிய ஹைதராபாத அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. பின்னர், ஆடிய டெல்லி அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
 
இதில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 46 ரன்கள் எடுத்தார். இதுவரையிலும் 94 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 3040 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
 
இதன் மூலம், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல், அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கும் முன்னேறியுள்ளார். முன்னதாக கிறிஸ் கெய்ல் 3000 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், டேவிட் வார்னர் இந்த சீசனில் மட்டும் 11 போட்டிகளில் பங்கேற்று 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இதன் மூலம் மேலும் தொடர்ந்து மூன்று சீசனில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.