வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 23 ஜூன் 2015 (15:54 IST)

அணி வீரர்கள் அறையில் ஒற்றுமை இல்லை; தோனிக்கு அதிக அழுத்தம் உள்ளது - முன்னாள் பயிற்சியாளர்

கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென ஓய்வு பெற்றார் கேப்டன் தோனி. ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் மட்டும் தோனி கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
 

 
இதற்கிடையே வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என்று அவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில் தோனியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யா இந்திய அணியில் பிளவு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
 
தோனி மீது அதிக அழுத்தம் உள்ளது. உடை மாற்றும் அறையில் உள்ல சூழலை சரி செய்ய அவர் கடினமாக போராடி இருக்க வேண்டும்.
 
உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது. அப்படிப்பட்ட அணியை வைத்துதான் தோனி அரை இறுதி வரை கொண்டு சென்றார். இதற்கு அவரது திறமையான செயல்பாடுதான் காரணம். வங்கதேச சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இந்திய அணியில் பிளவு இருந்தது. வீரர்கள் அறையில் ஒற்றுமை இல்லை. மாறுபட்ட சூழ்நிலை நிலவுகிறது.
 
முதல் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு தோனி என்னிடம் பேசினார். அணியில் உள்ள சீனியர் வீரர்களில் சிலர் எனக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றார். அவர்கள் மீது தோனி கடும் அதிருப்தியில் உள்ளார். கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் சூழ்நிலை சரியில்லை. பயிற்சியாளர் பிளட்சரை தோனி இழந்து விட்டார். அவர் ஒரு சிறந்த பயிற்சியாளர். இருவருக்கும் இடையே உள்ள தொடர்பு முற்றிலும் வேறுபட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.