வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 மார்ச் 2015 (11:39 IST)

உலகக் கோப்பை: எலியாட்டின் பூர்வீகம் தென் ஆப்பிரிக்காவாம்

நேற்று நடந்து முடிந்த முதல் அரை இறுதி போட்டியில், வெற்றிக்கு வித்திட்ட 36 வயதான கிரான்ட் எலியாட் தென் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் ஆகும்.
 

 
நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்களை களங்கடித்த வீரர் என்றால் அது கண்டிப்பாக நியூசிலாந்தின் எலியாட் என்றால் மிகையாகாது. ஆம் நேற்று அரங்கேறிய வாழ்வா சாவா என்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வீரர் எலியாட்டின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க அவ்வணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.
 
இப்போட்டியில் வெற்றிக்கு வித்திட்ட மாமண்ணன் எலியாட் நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் இல்லை என தெரியவந்துள்ளது. ஆம் அவர் எந்த அணியை நேற்று வீழ்த்தினாரோ அந்நாட்டின் மைந்தன் ஆகும். எலியாட்டின் பூர்வீகம் தென்ஆப்பிரிக்காவா என அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளனர். 
 
எலியாட் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தவர் ஆவார். மேலும் அந்நாட்டு உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் எலியாட்டிற்கு அங்கீகாரம் கிடைக்காததால், நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடி வந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து நாட்டை முதல்முறையாக இறுதி போட்டிக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.