வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 26 மார்ச் 2015 (14:24 IST)

உலகக் கோப்பையை வென்று வெட்டோரிக்கு சமர்பிப்போம்: மெக்கல்லம்

நடப்பு உலகக் கோப்பை மகுடத்தை வெட்டோரிக்காக வென்று சமர்பிப்போம் என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் விருப்பம் தெரிவித்துள்ளார். 
 

 
நியூசிலாந்ததின் சுழல் மண்ணனான வெட்டோரி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.
 
இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடருடன் வெட்டோரி ஓய்வு பெற போதவாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேப்டன் மெக்கல்லம் கூறுகையில், அணியின் வெற்றிக்காக வெட்டோரி பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். எனவே அவருக்காக உலகக் கோப்பையை வெல்வோம் என்றார்.

மேலும் வெட்டோரியின் கடைசி ஆட்டம் மிக கோலாகலமாக இருக்க வேண்டும். முதல் முறையாக வெட்டோரி உலகக் கோப்பை ஃபைனலில் பங்கேற்பது சிறப்பானதாகும் என்றார். இதுவரை 299 ஒரு நாள் போட்டிகளில் பங்கேறுள்ள வெட்டோரி 305 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.