வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 15 செப்டம்பர் 2014 (10:20 IST)

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: 72 ரன் வித்தியாசத்தில் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி அபார வெற்றி

6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி லாகூர் லயன்ஸை 72 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிப் பெற்றது.

முதலில் டாஸ் வென்ற லாகூர் அணியின் கேப்டன் முகமது ஹபீஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பின்னர், நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவ்சி, வில்லியம்சன் தனது அணியின் இன்னிங்சைத் தொடங்கினார்.

முதலில்  தடுமாறிய இவ்வணி பின்னர் கேப்டன் டேனியல் பிளைன் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 20 ஓவர்களில் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.

பின்னர் 171 ரன் இலக்கை நோக்கித் தனது இன்னிங்சைத் தொடங்கியது லாகூர் லயன்ஸ் அணி. இவ்வணியின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர்.

மறுமுனையில் நிலைத்து நின்ற சாட் நசீம் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் லாகூர் லயன்ஸ் அணியால் 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 98 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் நார்தன் டிஸ்டிரிக்ட்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செப்டம்பர் 16, 2014 ( நாளை ) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் லாகூர் லயன்ஸ் - சதர்ன் எக்ஸ்பிரஸ் (மாலை 4 மணி), மும்பை இந்தியன்ஸ் - நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் (இரவு 8 மணி) அணிகள் மோதவுள்ளன.