ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து மும்பை வீரர் கோரி ஆண்டர்சன் விலகல்


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (15:26 IST)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் 24 வயதான கோரி ஆண்டர்சன். இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.4.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 4 ஆட்டங்களில் 2 அரைசதம் உள்பட 114 ரன்கள் சேர்த்தார்.
 
 
இந்த நிலையில் கோரி ஆண்டர்சன் எஞ்சிய ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருக்கிறார். ஸ்கேன் பரிசோதனையில் இடது கை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக தாயகம் திரும்புகிறார்.
 
நியூசிலாந்து அணி மே–ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரிலும் ஆண்டர்சன் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :