வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 3 செப்டம்பர் 2014 (13:26 IST)

இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை, இங்கிலாந்து கேப்டன் குக் வேதனை

4 ஆவது ஒரு நாள் போட்டியிலும் வென்றதன் மூலம் இந்திய கேப்டன் தோனி புதிய சாதனை படைத்துள்ளார், தோல்வியடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் வேதனையடைந்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

பின் நடக்க இருந்த முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 30 ஆகஸ்ட், 2014 அன்று நாட்டிங்காம் நகரில் நடந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கான 4 ஆவது ஒரு நாள் போட்டி செப்டம்பர் 2, 2014 அன்று நடைப்பெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் மூலம் இங்கிலாந்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. மேலும் ஒருநாள் போட்டியில் இந்தியாவிற்கு  அதிக வெற்றியைத் தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி.

 
4 ஆவது ஒரு நாள் போட்டியிலும் தொடர்ந்து தோல்வி அடைந்ததால் இங்கிலாந்து கேப்டன் குக் மிகுந்த நெருக்கடியில் சிக்கியுள்ளார். மேலும் திறமைக்கு ஏற்ப ஆடாதது ஏமாற்றம் அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இது குறித்து குக் கூறுகையில், “பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்திலும் இந்திய அணி அசத்திவிட்டது. டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிறகு, ஒரு நாள் போட்டியில் விளையாடும் விதம் வேதனை அளிக்கிறது“ என்று தெரிவித்துள்ளார்.