வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (15:38 IST)

சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது புகார்

சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது புகார்

சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணிக்கு உதவி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

 
ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒரு நாள், 3 டெஸ்ட், 2 டி20, போட்டிகளில், விளையாட உள்ளது. இன்று இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, கண்டி நகர  பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழுவில் அந்நாட்டின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மீது ஆஸ்த்ரேலிய  அணி நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளது.

சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தற்போது, ஆஸ்த்ரேலிய அணியின் பந்துவீச்சு  ஆலோசகராக பணிபுரிகிறார். இந்நிலையில், பயிர்ச்சிக்காக, ஆஸ்த்ரேலிய அணிக்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் அவர்கள் மைதானத்தில் இருந்ததாகவும், மைதானத்தின் புற்களை வெட்டி ஆஸ்த்ரேலிய சுழல் பந்து வீச்சாளர்கள் சுலபமாக விக்கெட் எடுக்க உதவி செய்ததாகவும் முத்தையா முரளிதரன் மீது இலங்கை கிரிக்கெட் தலைவர் திலங்க சுமதிபால புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முத்தையா முரளிதரன் கூறுகையில், ” இது முற்றிலும் பொய்யான தகவல், நான் ஆஸ்த்ரேலிய கிரிக்கெட் அணியின்  பந்துவீச்சு  ஆலோசகராக இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை, நான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு துரோகம் செய்து விட்டது போல் கருதுகின்றனர். நான் அப்படிபட்டவன் இல்லை.” என்றார்.