வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 24 செப்டம்பர் 2014 (10:14 IST)

சாம்பியன்ஸ் லீக்: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி

20 ஓவர் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நார்தனை வீழ்த்தி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 86 ரன் வித்தியாசத்தில் வென்று,  தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ராய்ப்பூரில் செப், 24 ( நேற்று ) நடந்த லீக் ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்சும், நார்தன் டிஸ்ட்ரிக்சும் மோதின. 
 
முதலில் டாஸ் வென்ற நார்தன் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனால் பேட்டிங்கைத் தொடங்கியது ஹோபர்ட் அணி. 
 
இவ்வணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும் பின் ரன்ரேட் விகிதம் கிடுகிடுவென உயர்ந்தது. 3 ஆவது விக்கெட்டுக்கு இவ்வணி 100 ரன்கள் திரட்டியது. மேலும் பிளிஸ்சாட் 62 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
இறுதியில் ஹோபர்ட் அணி 178 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் ஹோபர்ட் அணி 76 ரன்களை சேகரித்தது குறிப்பிடத்தக்கது. இதன்பின்னர் ஆடிய நார்தன் அணி ஹோபர்ட் ஹரிகேன்ஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது. வில்லியம்சன், கேப்டன் பிளைன், வாட்லிங் ஆகிய முன்னணி வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.
 
இறுதியில் நார்தன் அணி  92 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 86 ரன் வித்தியாசத்தில்  ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.