கிறிஸ் கெய்ல்தான் எனது முன்னோடி - ஆண்ட்ரூ ஃபிளட்சர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 22 மார்ச் 2016 (16:40 IST)
கிறிஸ் கெய்ல்தான் எனது முன்னோடி என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஃபிளட்சர் கூறியுள்ளார்.
 
 
ஞாயிற்றுக்கிழமை [20-03-16] பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை அணிகளுக்கு இடையேயான சூப்ப்ர் 10 சுற்றுப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
அந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஃபிளட்சர் 64 பந்துகளில் [6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தனி ஆளாக நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார்.
 
இந்நிலையில், இது குறித்து கூறியுள்ள ஃபிளட்சர், ”டி 20 போட்டியை பொறுத்தவரையில் கிறிஸ் கெய்ல்தான் எனது முன்னோடி. போட்டிக்கு முன்னதாக அவர் என்னிடம் சொன்னார், இன்றைக்கு மிகச்சிறந்த நாளாக அமையப் போகிறது என்று.
 
அந்த நம்பிக்கைக்கு நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆனால், எல்லோராலும் இந்த பணியை செய்து முடிக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.
 
நாங்கள் ஒரு அணிக்கான உந்துசக்தியோடு இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக ஒன்றிணைந்திருந்து உள்ளோம். அந்த ஒன்றிணைவு தொடர்ந்து கொண்டு செல்ல விரும்புகிறோம்.
 
நாங்கள் எப்பொழுதுமே ஒவ்வொரு போட்டியையும், இறுதிப்போட்டியாக கருதுகிறோம். அதனால், வெற்றியை சாத்தியமாக்குவதற்காக கடினமாக விளையாடுகிறோம்” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :