செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 மார்ச் 2015 (13:59 IST)

புஷ்வானமாய் போன அனுகுண்டு; கிறிஸ் கெய்ல் 21 ரன்களில் வெளியேறினார்

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 21 ரன்களில் வெளியேறினார்.
 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28ஆவது லீக் போட்டி ’பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பெர்த்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
அதன் படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர் டுவைன் ஸ்மித் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்த களமிறங்கிய சாமுவேல்ஸ் 2 ரன்களில் பரிதாபமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
 
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதத்தை பதிவு செய்ததால், இந்த ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 21 ரன்களில் [2 பவுண்டரிகள், 1 கிக்ஸர்] எடுத்து முகமது சமி பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
 
கார்டர், ராம்தின், ரஸ்ஸல்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து வெளியாகினர். தற்போதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி 24.1 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.