வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜனவரி 2016 (15:24 IST)

ஐபிஎல் சென்னை அணி தடைக்கு எதிரான மனு தள்ளுபடி

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல்-லில் விளையாட தடைவிதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்தனர்.


 
 
2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக  சென்னை, ராஜஸ்தான் அணிக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. அந்த அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, வீரர்களும் ஏலம் விடப்பட்டனர்.
 
இந்நிலையில் சென்னை அணியின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய சுப்பிரமணியன் சாமியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்தனர்.
 
இன்று இந்த மனுவை விசாரணை செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல, இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என இந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.