வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (15:11 IST)

சாம்பியன்ஸ் லீக்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் - நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் பலப்பரிட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பார்படோஸ் டிரைடெண்ட்ஸ்-கேப் கோப்ராஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இந்நிலையில் செப், 26 ( இன்று ) மொகாலியில் நடைபெறும் 2 லீக் ஆட்டத்தில் பார்படோஸ் டிரைடெண்ட்ஸ்-கேப் கோப்ராஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன. 
 
இதில் கேப் கோபராஸ் 2 ஆட்டத்திலும், பார்போடாஸ் டிரைடெண்ட்ஸ் அணி தான் மோதிய ஒரு ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்துள்ளன. இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் முனைப்புடன் செயல்படும்.
 
மேலும் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்-நார்தன் டிஸ்டிரிக்ஸ் அணிகள் மோதவுள்ளன. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றிப் பெற்றுள்ளது. ஷேவாக், மெக்ஸ்வெல், பெய்லி ஆகிய அதிரடி வீரர்கள் கிங்ஸ் லெவனில் உள்ளனர்.  இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
 
நார்தன் டிஸ்டிரிகிஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது, குறிப்பிடத்தக்கது.