வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2015 (13:47 IST)

’வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தை வீழ்த்தும்’ - லாரா நம்பிக்கை

வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்துக்கு இடையே நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிச்சயம் வெற்றிபெறும் என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.
 
நாளை வெலிங்க்டனில் நடைபெறவுள்ள நான்காவது காலிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. நியூசிலாந்து அணி தனது லீக் சுற்றில் ஒன்றில் கூட தோல்வியடையவில்லை.
 

 
ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 போட்டிகளில் 3-ல் வென்று 3-ல் தோல்வியடைந்திருந்தது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்ப்வான் வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தை வீழ்த்தும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “நான் கொஞ்சம் தேசப்பற்று உள்ளவன் என்று நினைக்கிறேன். ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து அணியை வீழ்த்தும் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் அவர்கள் ஒரு அணியாக செயல்படுகின்றனர்.
 
நான் ஜான்சன் ஹோல்டரின் ரசிகன். நான் அவர் அணியை தலைமையேற்று வழிநடத்தும் விதம் அருமையாக உள்ளது. தொடர்ந்து அதுபோல செயல்பட வேண்டும்” என்றார். மேலும், கிறிஸ் கெய்லுடன் பாட்னர்ஷிப் டுவைன் ஸ்மித்துக்கு பதிலாக சார்லஸ் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.