1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Ashok
Last Modified: சனி, 20 பிப்ரவரி 2016 (18:20 IST)

​நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் புதிய உலக சாதனை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 370 ரன்களுக்கு சுருண்டது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், 54 பந்துகளில் சதமடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியில் முதலிடத்தை பிடித்தார்.
 



 

 
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, நியூசிலாந்து அணியிலிருந்து களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் குப்தில், லேதம், நிகோல்ஸ் தொடக்கதிலேயே வெளியேறினர். வில்லியம்சுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் மெக்கல்லம் அதிரடியாக ஆடினார். மறுமுனையில் ஆடிய வில்லியம்ஸன் 69 பந்துகளை எதிர்கொண்டு 7 ரன்கள் எடுத்தார். 
 
இந்நிலையில்,  ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்கல்லம், 54 பந்துகளில் சதமடித்து, டெஸ்ட் போட்டியில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்பு 56 பந்துகளில் விவியன் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா சதமடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இறுதியாக 79 பந்துகளை எதிர்கொண்ட மெக்கல்லம் 145 ரன்களை குவித்தார், இதில் 6 சிக்ஸர்கள், 21 பவுண்டரிகள் அடித்து அசத்தினார். 
 
இதையடுத்து ஆடிய ஆண்டர்சன் 72 ரன்களும், வால்ட்டிங் 58 ரன்களும் எடுத்தனர். ஆட்டநேர முடிவில் அனைத்து விக்கெட்டுளையும் இழந்து 370 ரன்கள் எடுத்தது.