1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 7 பிப்ரவரி 2015 (14:06 IST)

இந்திய பந்து வீச்சு பலவீனமாக உள்ளது: சேப்பல்

உலக கோப்பை போட்டிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சு கவலை அளிக்கும் விதத்தில் உள்ளதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
 
11 ஆவது  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடக்கவுள்ளது. இப்போட்டிகள் வரும் பிப், 14 அன்று தொடங்கி மார்ச் 29 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பங்குபெறும் இந்திய அணி குறித்து சேப்பல் கூறுகையில், இந்திய அணியின் பந்து வீச்சு சற்று பலவீனமாக இருப்பது வேதனையான விஷயமாகும். தற்போது இருக்கும் பந்து வீச்சால் எதிரணி வீரர்கள் சுலபமாக 300 ரன்களை எட்டி விடுவர். 
 
எனினும் எவ்வித முன்னேற்றமும் இந்திய பந்து வீச்சில் புலப்படவில்லை. சுழற்பந்தில் இந்திய அணி பலம் வாய்ந்தது ஆக திகழ்கிறது. எனினும் வேகப்பந்து வீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியில் ஷிகார் தவான் ரன் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார். எனவே அவறுக்கு மாறாக அணியில், ஸ்டூவர்ட் பின்னியை சேர்க்கலாம் என்று கூறினார்.