1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : புதன், 19 நவம்பர் 2014 (15:23 IST)

புவனேஸ்வர்குமாருக்கு சிறந்த வீரர் விருது: பிசிசிஐ

இந்திய அணியின் இளம் வேகபந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் சிறப்பாக செயல்பட்டதால், பி.சி.சி.ஐ சார்பில் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
2013–14 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற விருதுக்கு வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தேர்வு செய்யப்பட்டுளார். புவனேஸ்வர்குமார் 7 டெஸ்டில் பங்கேற்று 22 விக்கெட், மற்றும் 263 ரன்கள் எடுத்துள்ளார்.
 
மேலும் 22 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற புவனேஸ்வர் 17 விக்கெட், 7 டி20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 
 
இந்திய அணி முன்னாள் கேப்டன் திலிக் வெங்சர்க்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவர் 1983 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.