1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 25 மே 2015 (21:59 IST)

25 ஆண்டுகளுக்கு பிறகு அசாருதீன் சாதனை முறியடிப்பு

லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்திருந்த முன்னாள் இந்திய கேப்டன் அசாருதீனின் சாதனையை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.
 

 
இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளிடையே முதல் டெஸ்ட் போட்டி  நடைபெற்று வருகிறது. நேற்று 4ஆம் நாள் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ் 92 பந்துகளில் [15 பவுண்டரிகள்’ 3 சிக்சர்கள்] 101 ரன்கள் விளாசினார். இதில் சதத்தை அவர் 85 பந்துகளில் எடுத்தார்.
 
இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் அதிவேக சதமடித்தவர்களில் முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு இந்திய முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் 87 பந்துகளில் சதம் எடுத்ததே லார்ட்ஸ் மைதானத்தில் அதிவேக சத சாதனையாக இருந்தது. இந்த 25 வருடகால சாதனையை பென் ஸ்டோக்ஸ் முறியடித்துள்ளார்.