வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (13:15 IST)

ரோகித் சர்மாவிற்கு அர்ஜுனா விருதா ?

நடப்பு ஆண்டிற்கான அர்ஜுனா விருது பட்டியலில் இளம் வீரர் ரோகித் சர்மாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நேற்று அரங்கேறியது. இதில் நடப்பு ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவின் பெயர் பரிசீலிக்கபட்டுள்ளது.
 
மேலும் செயற்குழு கூட்டத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் புதிய பயிற்சியாளர் குறித்து இன்னும் இறுதிமுடிவு எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.