வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2014 (20:26 IST)

டெஸ்ட் தோல்வி - பேட்டிங் தோல்விகள் இந்திய அணியை காயப்படுத்துகிறது - தோனி

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைச் சந்தித்துள்ளது. வீரர்களின் பேட்டிங் தோல்விகள் இந்திய கிரிக்கெட் அணியை காயப்படுத்துவதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இந்தியா முதல் இன்னிங்சில் 152 ரன் மட்டுமே குவித்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 2–வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன் எடுத்து இருந்தது. 3–வது நாள் விளையாடிய  இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 367 ரன் குவித்தது. 
 
215 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி,  161 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தெரிவிக்கையில், பேட்டிங் தோல்விகள்  இந்திய அணியை காயப்படுத்தியுள்ளது. முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் பின் ஒருவராக விக்கெட்களை இழந்தார்கள். 
 
அணியின் 5வது பவுலர் குவித்த ரன்களைவிட டாப் வரிசையில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் குறைவான ரன்களையே எடுத்துள்ளனர்.
 
இங்கிலாந்தின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. புஜாராவுக்கு கொடுக்கப்பட்ட எல்.பி. டபிள்யூ முடிவு கடுமையானது என வருத்தம் தெரிவித்துள்ளார்.