வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Updated : வெள்ளி, 12 டிசம்பர் 2014 (16:13 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியா அசத்தல் ஆட்டம்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியின் வார்னர் மீண்டும் அசத்தலாக சதம் கண்டார்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிச, 9 அன்று தொடங்கியது. இதில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. 3 ஆம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 369 ரன்கள் எடுத்திருந்தது. 
 
பின்னர் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் ரோகித் சர்மா, சகா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒருகட்டத்தில் இருவரும் வெளியேற ஷமி மட்டும் போராடி 34 ரன்கள் சேகரித்தார். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 444 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில்அதிகபட்சமாக லியான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் பெற்ற 73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்கத்திலேயே கரண் சர்மாவின் சுழலில் ரோஜர்ஸ் 21 ரன்களில் வெளியேறினார். பின்னர் வாட்சன் 33 ரன்களிளும், கிளார்க் 7 ரன்களிளும் நடையை கட்டினர். 
 
எனினும் ஆஸ்திரேலியா அணியின் வார்னர் மீண்டும் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்த, அதன்விளைவு சதமாய் மாறியது. டெஸ்ட் அரங்கில் வார்னரின் 11 ஆவது சதமாக இது பதிவானது. மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் 9 ஆவது அரைசதத்தை எட்டினார்.
 
4 ஆவது நாள் ஆட்ட முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில், 5 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்து, 363 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஸ்மித் மற்றும் ஹாடின்  அவுட்டாகாமல் உள்ளனர். மீதம் ஒருநாள் உள்ள நிலையில், இப்போட்டியை டிரா செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.