வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 9 ஜனவரி 2015 (17:32 IST)

4 ஆவது டெஸ்டில் அஸ்வின் புதிய சாதனை; ஆஸ்திரேலியா 348 ரன்கள் முன்னிலை

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் ஆயிரம் ரன்களுடன் 100 விக்கெட் கைப்பற்றியதில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.


 
 
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 572 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 140 ரன்களுடனும், விருத்திமான் சஹா 14 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இன்று 4 ஆவது நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கோலி 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய அஸ்வின் 50 ரன்களுடனும், புவனேஷ்வர் குமார் 30 ரன்களுடனும் வெளியேற இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
 

 
 
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதையடுத்து இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர இறுதி வரை 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்துள்ளது.
 
அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்களும், பர்ன்ஸ் 66 ரன்களும், ரோஜர்ஸ் 56 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 
அஸ்வின் சாதனை:
 
சென்னையை சேர்ந்த அஸ்வின் சிட்னி டெஸ்டில் இன்று அரை சதத்தை எடுத்தார். 46–வது ரன்னை தொட்ட போது அவர் 1000 ரன்னை எடுத்தார். 117 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 
 

 
24 டெஸ்டில் அவர் 100 விக்கெட்டுக்கு மேலும் ஆயிரம் ரன்னையும் எடுத்துள்ளார். இதன்மூலம் அதிவேகத்தில் ஆயிரம் ரன்னை எடுத்து 100 விக்கெட் கைப்பற்றிய 3–வது வீரர் என்ற சாதனையை படைத்தார். 
 
இயன் போத்தம் (இங்கிலாந்து) 21 டெஸ்டிலும், வினோ மன்காட் (இந்தியா), 23 டெஸ்டிலும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.