வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2015 (15:46 IST)

”இந்தியாவுடன் இனி எப்போதுமே விளையாட மாட்டோம்” - பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தொடரை ரத்து செய்தால், இனி இந்தியாவுடன் எப்போதுமே விளையாட மாட்டோம் பாகிஸ்தான் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 
கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெறவில்லை.
 
இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் இனைந்து கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவது குறித்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து இந்தியாவிடம் முறையிட்டு வருகிறது.
 
ஆனால், இரு நாடுகளுக்குமிடையேயான அரசியல் பதட்டநிலை காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மறுத்து வருகிறது. பாகிஸ்தான் இந்தியாவிடம் தொடர்ந்து முறையிடுவதற்கு மூத்த வீரர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாகித் அஃப்ரிடி,  ”இந்தியாவின் பின்னால் ஏன் ஓடுகிறது என்று எனக்கு புரியவில்லை. பாகிஸ்தான் இந்தியாவை இந்த மாதிரி வரவேற்றதை இதற்கு முன் எப்போதுமே பார்த்ததில்லை” என்று தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
 
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தொடரை ரத்து செய்தால், இனி இந்தியாவுடன் எப்போதுமே விளையாட மாட்டோம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ஷகார்யர் கான் கூறுகையில், “நாங்கள் இதுவரை இது தொடர்பாக எந்த இறுதி முடிவையையும் எடுக்கவில்லை.
 
ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தொடருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்றால், ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்கள், ஆசிய கோப்பைகள் ஆகிய அனைத்திலும் நாங்கள் இந்தியாவுடன் இனி விளையாட மாட்டோம்.
 
நாங்கள் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பதிலுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் [பிசிசிஐ] எங்களுடன் இணைந்து விளையாட விருப்பம் உள்ளதா, இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.