Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகிய அனில் கும்ளே


Abimukatheeesh| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (21:04 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ளே விலகினார்.

 

 
அனில் கும்ளேவின் பயிற்சியாளர் பதவி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு முடிவடையும் நிலையில் புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க போதிய அவகாசம் தேவை என அடுத்து நடைப்பெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் கும்ளே பயிற்சியாளராக நீடிப்பார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
 
இந்நிலையில் அனில் கும்ளே தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இதனிடையே கோலிக்கும், கும்ளேவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகியது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் தொடங்கும் முன் செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, எனக்கும் பயிற்சியாளர் கும்ளேவிற்கும் இடையே எந்த மோதலும் இல்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
ஆஸ்திரேலியாவுடனான தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் சொதப்பியது. ஐசிசி தரவரிசை பட்டியலில் இடம்பிடித்த அஸ்வின், ஜடேஜா ஆகியோர் சாம்பியன்ஸ் தொடரில் சொதப்பினர். பந்து வீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை.
 
இந்நிலையில் அனில் கும்ளே தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தற்போது இதுகுறித்து கூடுதலான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :