Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரோகித் ஷர்மா, விராட் கோலி அடுத்தடுத்து அவுட்: இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம்!

ரோகித் ஷர்மா, விராட் கோலி அடுத்தடுத்து அவுட்: இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கம்!


Caston| Last Modified ஞாயிறு, 18 ஜூன் 2017 (19:30 IST)
சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 339 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

 
 
இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறக்கியது இந்திய அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல வெற்றிக்கூட்டணியாக ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களம் இறங்கினர்.
 
பாகிஸ்தான் அணியின் முதல் ஓவரை இளம் வேகப்புயல் அமிர் வீசினார். அந்த ஓவரில் முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்த ரோகித் ஷர்மா மூன்றாவது பந்தில் எல்பிடபுள்யூ முறையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ரன் எதுவும் எடுக்காமல் பரிதாபமாக பெவிலியன் திரும்பினார்.
 
இமலய இலக்கு என்பதால் இந்த ஆட்டத்தில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை அளித்தால் நிச்சயம் வெற்றி பெறும் நம்பிக்கை ரசிகர் மத்தியில் இருந்தது. ஆனால் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி ரோகித் ஷர்மா அதிர்ச்சி அளித்தார்.
 
இதனையடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் விராட் கோலி களத்தில் இறங்கினார். ஆனால் அவரும் யாரும் எதிர்பாராத விதமாக அவுட்டாகி மேலும் அதிச்சி அளித்தார். இவரது விக்கெட்டையும் அமிர் தான் கைப்பற்றினார். இதனால் இந்தியாவின் வெற்றிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது யுவராஜ் சிங் களமிறங்கியுள்ளார். இந்திய அணி தற்போது வரை 4 ஓவர் முடிந்துள்ள நிலையில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 7 ரன் எடுத்து விளையாடி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :