Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அதிரவைக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி விளம்பர கட்டணம்


Abimukatheesh| Last Updated: சனி, 17 ஜூன் 2017 (15:04 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளை நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் 30 வினாடி விளம்பரம் செய்ய ரூ.1 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 
10 வருடங்களுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறிதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் இந்தியா பாகிஸ்தான் அணியை வென்றது. அதன் பிறகு நாளை ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நாளை இரு அணிகளும் விளையாட உள்ளன.
 
இறிதிப்போட்டி குறித்து இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது. நாளை நடக்கவுள்ள போட்டியை கட்டாயம் இரு நாட்டு மக்களும் வெறித்தனமாக ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பாகிஸ்தான் என்றாலே எதிரி நாடு என்ற எண்ணம் இந்திய மக்களிடையே உள்ளது. இதனால் இறுதிப்போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இறுதிப்போட்டி நேரலை ஒளிப்பரப்பின் போது விளம்பரம் செய்ய 30 வினாடிக்கு ரூ.1 கோடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :