1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (17:53 IST)

சிக்ஸர்களில் சச்சின், கங்குலி சாதனையை முறியடித்த டி வில்லியர்ஸ்

ஓர் ஆண்டில் அடிக்கப்பட்ட சிக்ஸர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகிய இருவரின் சாதனையையும் தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் கேப்டன் டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார்.
 

 
ஞாயிற்றுக்கிழமை [11-10-15] கான்பூரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
 
இதில் தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் கேப்டன் டி வில்லியர்ஸ் 73 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். இதில், 5 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இவர் அடித்துள்ள சிக்ஸர்கள் இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.
 
அதாவது ஓர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகிய இருவரின் சாதனையை டி வில்லியர்ஸ் முறியடித்துள்ளார்.
 
1998ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் 9 சதங்கள் எடுப்பதற்கு 29 சிக்ஸர்கள் அடித்துள்ளார். ஆனால், டி வில்லியர்ஸ் இந்த ஆண்டில் 3 சதங்களில் 30 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
 
அதே போன்று ஓர் ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, கடந்த 2000ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி கேப்டனாக ஐந்து சதங்களில் 27 சிக்ஸர்கள் அடித்துள்ளார். டி வில்லியர்ஸ் அதனையும் முறியடித்துள்ளார்.