வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 ஏப்ரல் 2016 (10:00 IST)

500-க்கும் மேற்பட்ட பெண்களுடன் படுக்கையறையில் விளையாடிய கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தன்னுடைய நாட்டுக்காக விளையாடுவதையே லட்சியமாக வைத்திருப்பர். நாட்டுக்காக விளையாடும் உலகத்தர வீரர் ஆனால் போதும், அவருக்கு பேரும், புகழும், பணமும், ஊடக பிரபலமும் தானாக வந்துவிடும்.


 
 
கிரிக்கெட் உலகில் மேற்கிந்திய தீவுகள் அணி தனி சிறப்புமிக்கது. அதிலும் இந்த வருடம் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டினோ பெஸ்ட்டின் சுயசரிதை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இவர் தன்னுடைய சுயசரிதையில் தான் இதுவரை 500 முதல் 650 பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் அடித்த ரன்களை விட அவர் உறவு கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
 
25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெஸ்ட் 401 ரன்னும், 26 ஒரு நாள் போட்டியில் 76 ரன்னும், 6 டி20 போட்டிகளில் விளையாடி 17 ரன்னும் அடித்துள்ளார். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 494 ரன் அடித்த அவர் 500 முதல் 650 பெண்களுடன் உறவு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
மைண்ட் த விண்டோஸ்: மை ஸ்டோரி என்ற அவரது சுய சரிதை புத்தகத்தில் அவரது படுக்கையறை விளையாட்டை அம்பலப்படுத்தியுள்ளார். அதில் தன்னை ஒரு ஆண் விபச்சாரி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தன்னுடைய முதல் காதலி மூலம் தனக்கு தமனி என்ற பெண் குழந்தை உள்ளது என கூறிய அவர் அதன் பின்னர் தான் பிளே பாயாக மாறியதாக கூறியுள்ளார்.
 
அவரது புத்தக்கத்தில் உள்ள சில துளிகள்:
 
* எனக்கு பெண்களை பிடிக்கும், பெண்களுக்கும் என்னை பிடிக்கும். உலகில் மொட்டைத் தலையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் ஆண் நான் தான் என குறிப்பிட்டுள்ளார்.
 
* நான் ஒரு கிரிக்கெட்டராக உலகில் பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். பெண்களுடன் பேசுவேன், அவர்களுடன் டேட்டிங் சென்று படுக்கையறையை பகிர்ந்து கொள்வேன்.
 
* உலகம் முழுவதும் 500 முதல் 650 பெண்களுடன் இதுவரை உடலுறவு செய்துள்ளேன்.
 
* தான் ஒரு ஆண் விபச்சாரியை போல் நடந்து கொண்டதாகவும் டினோ பெஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.
 
* எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அது யாராக இருந்தாலும் போய் பேசுவேன். அவர் சிங்கிளாக இருக்கிறார் என தெரிந்தால் அவரிடம் நானாகவே அறிமுகமாகி நான் டினோ உங்கள் பெயர் என்ன என கேட்பேன். எந்த பெண்ணும் என்னை மிரட்டியதில்லை என கூறியுள்ளார் டினோ பெஸ்ட்.